இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

‘பலூன்’ படத்தின் மூலம் வெற்றியை சுவைத்துள்ள ஜெய்யின் அடுத்த படமான ‘ஜருகண்டி’ படத்தை வெங்கட் பிரபுவின் முன்னாள்  இணை இயக்குநரான பிச்சுமணி இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யாவும், தயாரிப்பாளர் பத்ரி கஸ்துரியும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ரேபா மோனிகா ஜான் நடிக்கின்றார். மேலும், ரோபோ ஷங்கர், டேனி அருண், ஜெயக்குமார், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். R.D.ராஜசேகரின் ஒளிப்பதிவில், போபோ சஷியின் இசையில், பிரவீன் K.L. படத் தொகுப்பில், ரேமியனின் கலை இயக்கத்தில், டான் அசோக்கின் சண்டை இயக்கத்தில் ‘ஜருகண்டி’ வந்து கொண்டிருக்கிறது.  

‘ஜருகண்டி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  நேற்று, இந்திய முழுவதும் மொழி எல்லைகளை தாண்டி  தனக்கென ரசிகர்களை பெற்றிருக்கும்  பிரபல இயக்குநரான A.R.முருகதாஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.

இது குறித்து பேசிய தயாரிப்பாளர் நிதின் சத்யா, ”நல்ல படங்களை என்றுமே பாராட்டி ஆதரவு தரும் இயக்குநர் A.R.முருகதாஸ் எங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. எங்கள் படத்தின்  90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஒரு தயாரிப்பாளராக இப்படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்…” என்று பெருமையுடன் கூறினார்.
error: Content is protected !!