full screen background image

சிபிராஜ், பிந்து மாதவி நடிக்கும் புதிய படம் ‘ஜாக்சன் துரை’

சிபிராஜ், பிந்து மாதவி நடிக்கும் புதிய படம் ‘ஜாக்சன் துரை’

SRI GREEN PRODUCTIONS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் M.S.SHARAVANAN  அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் ‘ஜாக்சன் துரை’.

இந்த ‘ஜாக்சன் துரை’ படத்தில் சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்.. இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன் முறையாக ஹாலிவுட் நடிகர் ZACHERY-யும் நடிக்கவிருக்கிறார்.

jackson durai-pooja-1

‘ஜாக்சன் துரை’ திகிலும், நகைசுவையும் கலந்த படமாக உருவாகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை 1940 -களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்றாற்போன்ற அரங்குகள் மிகுந்த பொருள் செலவில் மிக பிரமாண்டமாக  அமைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் சிறப்பு என்னவெனில் தமிழின் முதல்  PERIODICAL   பேய் படம் என்கிற பெயரை இது பெற்றுள்ளது.  மேலும் ஹாலிவுட்டில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘CONJURING’  படத்தின் ஒப்பனை தொழில் நுட்பமும் இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

இத்திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம், எழுதி இயக்குகிறார் தரணிதரன், ஒளிப்பதிவு – யுவராஜ், இசை – சித்தார்த் விபின், படத்தொகுப்பு – விவேக் ஹர்ஷன்  கலை – T.N. கபிலன், EXECUTIVE PRODUCER – அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், PRODUCTION CONTROLLER – M.பூமதி, LINE PRODUCER – செல்வா, PRODUCTION MANAGER – C.பாலமுருகன் PRO – நிகில் முருகன் மற்றும் இவர்களுடன் பல தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

Our Score