மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஜாக்கி ஷெராப்

மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ஜாக்கி ஷெராப்

பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கப் போகிறார்.

‘சூது கவ்வும்’, ‘பீட்சா’, ‘தெகிடி’ ‘முண்டாசுப்பட்டி’ போன்ற படங்களை தயாரித்து பல புதிய இயக்குநர்களை தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார் இப்போது தானே புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார்.

‘மாயவன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில்தான், ஜாக்கி ஷெராப் வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்.

இந்தப் படத்தில் நாயகனாக சந்திப் கிஷனும் நாயகியாக லாவண்யா திரிபாதியும் நடிக்கிறார்கள். மேலும், டேனியல் பாலாஜி, பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், ‘மைம்’ கோபி, பாபு ஆன்டனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், படத் தொகுப்பு – லியோ ஜான்பால், இசை – ஜிப்ரான், திரைக்கதை, வசனம் – இயக்குநர் நலன் குமாரசாமி.

ஜாக்கி ஷெராப் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும்  ஏப்ரல் 4-ம் தேதி முதல்  சென்னையில் படமாக்கப்படவுள்ளன.

ஜாக்கி ஷெராப் ஏற்கெனவே தமிழின் மாற்று சினிமா என்று இன்றும் புகழப்படும் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திலும் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்திலும் நடித்திருக்கிறார். ‘மாயவன்’ ஜாக்கி நடிக்கும் 3-வது தமிழ்ப் படமாகும்.