விமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.!

விமல் படத்தின் டீசரை 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.!

சாய் புரொடக்சன் பட நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ரே ஆர்.சர்வண் தயாரித்துள்ள திரைப்படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.’

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஆஷ்னா சவேரி நடித்துள்ளார். மற்றும். ஆனந்தராஜ், சிங்கம் புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ்,  ஆத்மா ஆகியோருடன்  போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன், இசை – நடராஜன் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை இயக்கம் – வைரபாலன், நடன இயக்கம் – கந்தாஸ், சண்டை இயக்கம் – ரமேஷ், படத் தொகுப்பு – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி, தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண், எழுத்து, இயக்கம் – A.R.முகேஷ்.

படம் பற்றி இயக்குநர் முகேஷ் பேசும்போது, “இது கிளாமர் கலந்த ஹூயூமர் படம் என்று ஆரம்பத்திலேயே கூறி இருக்கிறோம். முகம் சுளிக்கிற மாதிரி ஆபாசம் இல்லாமல் ரசிக்கிற மாதிரி கிளாமர் ஹுயூமர் படம் இது.

சினிமா என்பதே ஏழு வகையான கதையமைப்பு கொண்டவைதான். இதற்குள்தான் எல்லா படங்களுமே அடங்கும். அதில் ஒரு வகை கிளாமர் ஹுயூமர். அதைத்தான் இதில் கையாண்டிருக்கிறோம். கிளாமரிலும் எல்லை மீறாத அளவையே தொட்டிருக்கிறோம்.

இன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. இளைய தலைமுறையை சேர்ந்தவர்கள்தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் கதையாக சொல்கிறோம்.

இந்தப் படத்தின் டீசரை யூ டியூப்பில்  20  லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும். படத்தின் படப்பிடிப்பு லண்டனில் 20 நாட்கள் நடைபெற்றது. மேலும், தென்காசியிலும், சென்னையிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது…” என்றார்.