விமல், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

விமல், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’

சாய் புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’.

தயாரிப்பாளர் சர்மிளா மாண்ரே கன்னட பட உலகில் பிரபலமான நடிகை. கன்னடத்தில் 40 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சர்மிளா மாண்ரேவை முதன்முதலாக கதாநாயகியாக கன்னடத்தில் அறிமுகப்படுத்தியவர் இந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் இயக்குநரான A.R.முகேஷ்.

தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றிக் கடனாக, தான் தயாரிக்கும் முதல் படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கே அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் சர்மிளா மாண்ரே.

இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். ஆஷ்னா சவேரி நாயகியாக நடிக்கிறார்.

மற்றும் ஆனந்தராஜ், சிங்கம்புலி, வெற்றிவேல் ராஜா ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கோபி, இசை – நட்ராஜ் சங்கரன், பாடல்கள் – விவேகா, கலை   -வைரபாலன், நடனம் – கந்தாஸ், சண்டை பயிற்சி – ரமேஷ், படத் தொகுப்பு  – தினேஷ், தயாரிப்பு மேற்பார்வை  – சுப்ரமணி, தயாரிப்பு  –   சர்மிளா மாண்ரே, R.சாவண்ட், எழுத்து, இயக்கம் –  A.R.முகேஷ். 

இவர் தமிழில் ‘இன்று முதல்’, ‘ஆயுதம்’ ஆகிய படங்களையும் கன்னடத்தில் ‘சஜினி’ மற்றும் ‘ஜோக்கர்’ என்கிற ஹாலிவுட் படத்தையும் இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் முகேஷ் பேசும்போது, “இது கிளாமர் மற்றும் ஹுயூமர் கலந்த திரைப்படம். இதுவொரு ஜாலியான பொழுதுபோக்கு திரைப்படம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிடிக்கும்வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு  லண்டனில் பத்து நாட்கள் நடைபெற்றது. இப்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..” என்றார்.




error: Content is protected !!