ஹாலிவுட் நடிகர் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ தமிழ்த் திரைப்படம்

ஹாலிவுட் நடிகர் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை’ தமிழ்த் திரைப்படம்

காலம்காலமாக நம்மிடையே புழங்கி வரும் ‘வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும் புராணக் கதை’யின் பாத்திரங்களை அடிப்படையாக வைத்து ‘இது வேதாளம் சொல்லும் கதை’  என்கிற பெயரில் ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, மற்றும் ‘ஜீரோ’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்த அஸ்வின் ககாமனுவும், ‘ஆரண்ய காண்டம்’ மற்றும் ‘ஜோக்கர்’ படத்தில நடித்திருக்கும் குரு சோமசுந்தரமும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளனர். மேலும் பிரபல குத்து சண்டை வீரரும், ஹாலிவுட் நடிகருமான கிரஃ  புரிட்ஜ் வில்லன் வேடத்தில் வந்து மிரட்டுவதோடு மட்டுமல்லாமல் படத்தின் சண்டை  காட்சிகளையும் வடிவமைத்துள்ளார்.

மேலும் லெஸ்லி திரிபாதி(அறிமுகம்), அக்னீஸ்வர் அன்பு, கனிகா குப்தா ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆடை வடிவமைப்பாளர் – ஜெயலட்சுமி சுந்தரேசன், விளம்பர டிசைன்ஸ் – ட்ரொட்ஸ்கி மருது. கலை – ராஜ்குமார் கிப்சன், சண்டை பயிற்சி –  கிரஃ  புரிட்ஜ் / அசோக்,  ஒளிப்பதிவாளர் – பிலிப் R சுந்தர், எடிட்டிங் – ஆனந்த் கேரளாடின், அனிமேஷன் – போபசன்ட் ரூக்கறங்க சரித், சாய்பிலே, தயாரிப்பு மேற்பார்வை- கண்டன ஸ்டுடியோஸ் , பாங்காக் ஒளிப்பதிவு  ராபர்டோ சாஸ்சாரா, இசை – ஜிப்ரான், PRO – வின்சன் சி.எம்., இணை தயாரிப்பாளர்கள் – சுபா கணேஷ் / பாசக் காசிலேர் பிரசாத், தயாரிப்பாளர்               – பி.கணேஷ் / ரத்தீந்தரன்பிரசாத், எழுத்து மற்றும் இயக்கம் – ரத்தீந்தரன் பிரசாத்.

IMG_7173

படத்தின் இயக்குநரான ரதீந்த்ரன் பிரசாத்,  ஆரஞ்சு மிட்டாய் மற்றும் றெக்க படத்தை தயாரித்த ‘காமன் மேன் ப்ரெசன்ட்ஸ்’ பி.கணேஷ் ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் பிரபலமான நடிகர் ஒருவருக்கும் முக்கியமான கெஸ்ட் ரோல் இருக்கிறதாம். படம் வெளியாகும்வரைக்கும் அந்த நடிகர் யார் என்பதை சொல்ல மாட்டோம் என்கிறார்கள் படக் குழுவினர்.

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். சர்வதேச விருதுகள் பல பெற்ற இத்தாலிய ஒளிப்பதிவாளர் ராபர்டோ சஸாராதான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் இயற்கை நிலப் பகுதிகளை பதிவு பண்ணுவதில் கை தேர்ந்தவர். பாங்காங்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆசியாவிலேயே சிறந்த அனிமேஷன் கலைஞரான தாய்லாந்தை சேர்ந்த ‘பாப்சந்த்ருக் ரந்சரித்’ என்பவர் இப்படத்தின் அனிமேஷன் பணிகளை மேற்கொள்கிறார்.

IMG_7146

மிக, மிக வித்தியாசமான கதை களத்துடன் உலகளாவிய கலைஞர்களுடன் இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநரான ரத்தீந்தரன் பிரசாத். இவரின் ‘கொடைக்கானல் வான்ட்டட்’ பாடல் வீடியோ உலகை திரும்பி பார்க்க வைத்ததோடு மட்டுமல்லாமல், கொடைக்கானல் மலையில் பாதர கழிவுகளை கொட்டிய யூனி லீவர் நிறுவனத்திடமிருந்து கொடைக்கானல் மக்களுக்கு இழப்பீட்டினையும் பெற்றுத் தந்தது.

சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவிய அந்த வீடியோ பாராட்டுகளை அள்ளி குவித்ததோடு மட்டுமின்றி மிகப் பெரிய ஹாலிவுட் கலைஞர்களான அஷ்டன் குட்சர், மார்க் ருவல்லோ, நிக்கி மினாச், கெய் கவசாக்கி,மற்றும் சேகர் கபூர் போன்றவர்களால் பகிரவும்பட்டது.

மேலும் இதே இயக்குநர் எழுதி இயற்றிய ‘ஸ்வேயர் கார்பரேஷன்’ என்னும் குறும் படம் 26 சர்வதேச அரங்குகளில் திரையிடப்பட்டதோடு மட்டுமன்றி ‘கேன்ஸ்’ பட விழாவில் விருதுகளை அள்ளி குவித்தது.  இந்த வருடம் இவர் எழுதி, வெளியிட்ட ‘சென்னை புறம்போக்கு பாடல்’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

எண்ணூர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சுற்று சூழல் சீர்கேட்டையும், அதனை ஏற்படுத்திய அதிகாரிகளின் அலட்சியத்தியும் தட்டிக் கேட்கும் இந்தப் பாடலை பிரபல கர்நாடக இசை கலைஞர் டி.எம். கிருஷ்ணா பாடியுள்ளார்.  இதுவும் சமூக வலைத் தளங்களில் தற்சமயம் வைரலாக பரவிவருகின்றது. 

இப்படியாக சமூக அக்கறையுள்ள வீடியோக்களை வெளியிட்ட இயக்குநரிடம் இருந்து ஒரு நல்ல கதையை நாம் எதிர்பார்க்கலாம்தான்.

ராஜஸ்தானில் முதல்கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியிருக்கும் படக் குழு தங்களது அடுத்தக்  கட்ட  படப்பிடிப்புக்குக்காக ஹைதராபாத் செல்கிறார்கள்.
error: Content is protected !!