ரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம்..!

ரசிகர்களை திகிலடைய வைக்கப் போகும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம்..!

ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளரான ஜி.டில்லிபாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’.

இத்திரைப்படத்தில் அருள்நிதி, அஜ்மல், மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மு.மாறன் இயக்கியிருக்கிறார்.

சமீபத்திய மியூசிக் சென்சேஷன் சாம் சி.எஸ், படத்துக்கு இசையமைத்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பின்னணி இசையில் தனக்கு ஒரு தனி பாணி உண்டு  என்று இந்த படத்திலும் தன் திறமையால் நிரூபித்திருக்கிறார் சாம்.

இத்திரைப்படம் வரும் மே 11-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது.

இதையொட்டி தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு பேசுகையில், “நான் திரில்லர் வகை படங்களின் தீவிர ரசிகனாக இருப்பதால், இயக்குநர் மு.மாறனின் கதை சொல்லலை கண்டு வியந்தேன்.

சொன்ன கதையை அப்படியே திரையில் காட்சிகளாக சிறப்பாக, திறமையாக கொண்டு வந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் படம் பார்க்கும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் காட்சிகள் நிறைய உள்ளன, அவை உங்கள் கண்களை இமைக்க விடாது. ஈர்க்கக் கூடிய விஷயங்களை திரைக்கதையில் சரியாக பிணைத்துள்ளார்.

மொத்தப் படத்திலும் அருள்நிதி ஒரு மிஸ்டர் பர்ஃபெக்ட்டாக இருந்தார். தனது நடிப்பை மெறுகேற்ற அவர் காட்டிய ஈடுபாடு ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது. ‘மௌன குரு’ எப்படி அவரின் கேரியரை உயர்த்தியதோ, அப்படி இந்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ அவரை அடுத்த தளத்துக்கு கொண்டு செல்லும். 

‘ரெமோ’, ‘வேலைக்காரன்’ போன்ற பிரம்மாண்ட படங்களை தந்த ‘24 AM ஸ்டுடியோஸின்’ ஒரு அங்கமான ‘24 PM ஸ்டுடியோஸ்’ இந்த படத்தோடு வெளியிட எங்களோடு கை கோர்த்திருப்பது எங்களுக்குப் பெருமையான விஷயம்..” என்றார்.




error: Content is protected !!