தமிழில் முதல் முறையாக டைம் மிஷின் கதை..!

தமிழில் முதல் முறையாக டைம் மிஷின் கதை..!

‘அட்டகத்தி’, ‘பிட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘வில்லா(பிட்சா 2)’, ‘முண்டாசுப்பட்டி’,  ‘சரபம்’, ‘எனக்குள் ஒருவன்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் தயாரித்துள்ள படம்தான் ‘இன்று நேற்று நாளை’.

indru netru naalai-poster

“சொந்த தொழில்தான் செய்வேன். யாரிடமும்  கை கட்டி வேலை செய்யமாட்டேன்…” என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் ‘புலிவெட்டி’ ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரன் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் ஒரு டைம் மிஷினை வைத்துக் கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே, இந்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் கதை.

indru netru naalai-poster-1

விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். மேலும், கருணாகரன், ஜெயபிரகாஷ், ரவிசங்கர், டி.எம்.கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வசந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஹிப்ஹாப் தமிழா’ புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். சண்டை பயிற்சியை பில்லா ஜெகன் மேற்கொள்கிறார். கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன். ரவிக்குமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியிடு வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.