ஒய்.ஜி.மகேந்திரா-லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கும் ‘இந்த நிலை மாறும்’ திரைப்படம்

ஒய்.ஜி.மகேந்திரா-லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கும் ‘இந்த நிலை மாறும்’ திரைப்படம்

பந்தளம் சினிமாஸ் சார்பில் சிவா, விஜி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘இந்த நிலை மாறும்’.

இந்தப் படத்தில் ஒய்.ஜி.மகேந்திரா, லட்சுமி ராமகிருஷ்ணன், டெல்லி கணேஷ், சந்தான பாரதி, ஆர்.எஸ்.சிவாஜி, சாம்ஸ், டி.எம்.கார்த்திக், அஷ்வின், ராம், பிரவீன், நிவேதிதா, நித்யா, தீனா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ரயீஸ் அஹமத், இசை, படத் தொகுப்பு, ஒலி வடிவமைப்பு – அருண் காந்த், பாடல்கள் இன்பா, காமி, பாடகர்கள், சுசித்ரா, சுரேஷன், ரோஷன், வைஷாலி, கோகுல் ராஜ், திலக், பின்பணி இயக்கம் – ரூப் ஸ்டூடியோஸ், இணை தயாரிப்பு – இன்பா, தயாரிப்பு – சிவா, விஜி, எழுத்து, இயக்கம் – அருண் காந்த்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை ஏவி.எம். ரிக்கார்டிங் தியேட்டரில் பூஜையுடன் துவங்கியது.

இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் பங்கு பெறும் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

 
error: Content is protected !!