விஜய், சிவகார்த்திகேயனிடம் நடனத்தில் போட்டியிட காத்திருக்கும் இமான் அண்ணாச்சி

விஜய், சிவகார்த்திகேயனிடம் நடனத்தில் போட்டியிட காத்திருக்கும் இமான் அண்ணாச்சி

சமூக போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை எஸ்.ஏ.சந்திரசேகரனின் நடிப்பில் படமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதில் நகைச்சுவையான அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலை கபிலன் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

“சாராய மண்டைய மண்டைய

குண்டக்க மண்டக்க, நெஞ்சுல சாத்திக்க

ஜவ்வாது இவ நெஞ்சுல பூசிக்க

வாடா மச்சான்“ என்று துவங்கும் இந்தப் பாடல் காட்சியில் சசிரேகா என்ற நடிகையுடன்  இமான் அண்ணாச்சியும் நடனமாடியிருக்கிறார்.  

நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்துவரும் இமான் அண்ணாச்சி இப்போதுதானஅ முதல்முறையாக நடனமாடியிருக்கிறார்.

இந்த புதிய அவதாரம் பற்றி நடிகர் இமான் அண்ணாச்சி கூறும் பொழுது, “எனக்குள் இப்படி ஒரு நடனத் திறமை இருப்பதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த படத்தின் காட்சிகளிலும், பாடலிலும் என்னை இயக்குநர் மிக அட்டகாசமாக பயன்படுத்தி இருக்கிறார். இனிவரும் படங்களில் இளைய தளபதி விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடனத்தில் போட்டி போடமுடியும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்துள்ளது…” என்றார் நம்பிக்கையோடு..!

இந்தப் பாடலுக்கு நடன பயிற்சி அளித்தவர் ‘கும்கி’, ‘கயல்’, ‘ஆர்யா-2’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ போன்ற படங்களுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் நோபில் என்பது குறிப்பிடத்தக்கது பாலமுரளி பாலு படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தற்போது படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கிறது.