‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு..!

‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு..!

பெண் கல்வியை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெண்களை மையமாக்கி அவர்களின் கல்வியைப் பற்றிப் பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ள  ஒரு படம்தான் ‘இலை’.

இப்படத்தை பினீஷ்ராஜ் இயக்கியுள்ளார். லீஃப்  புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

ilai stills

இந்தப் படத்தில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி , ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம்.  காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல் ,  இசை – விஷ்ணு வி. திவாகரன் ,வசனம் ஆர்.வேலுமணி ,  எடிட்டிங் – டிஜோ ஜோசப்,  நிர்வாகத் தயாரிப்பு _ ஷோபன் குமார் , தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன் .தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ்  இண்டர் நேஷனல். 

இப்படம் இப்போது வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. வருகிற ஏப்ரல்  21-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘இலை’ படத்தைப் பார்த்த தணிக்கைத் துறை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்ததுடன் படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.

630A0961_resize

“இது ஒரு தரமான படம். பெண் கல்வி பற்றி நல்ல கருத்தைச் சொல்லியிருக்கும் படம். வணிக ரீதியிலும் உருவாக்கப்பட்டுள்ளது.  படத்தைப் பார்த்தபோது எந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் இல்லை. எந்த வாக்குவாதமும் எழவில்லை. தணிக்கை  செய்ய எங்களுக்கு மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும்  இருந்தது. இது மாதிரி அனுபவம். எப்போதாவதுதான் கிடைக்கும்…” என்று பாராட்டியிருக்கிறார்கள்.

சென்சாரின் ‘யூ’ சான்றிதழுடன் தணிக்கை அதிகாரிகளின் பாராட்டுகளைத் தங்கள் படத்துக்குக் கிடைத்திருக்கும் தரச் சான்றிதழாக  எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது படக் குழு.

DSC_3740 (2)_resize

படம் பற்றி பற்றி இயக்குநர் பினீஷ்ராஜ் பேசும்போது, “இது வெறும் கருத்து சொல்லும் படமல்ல. இக்கதையில் வணிக சினிமாவுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன. நல்லதொரு கதையுடன் தொழில்நுட்ப ஆச்சரியங்களும் இணைந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு வணிக ரீதியிலான  முழு நீளப் படமாக உருவாகியுள்ளது இந்த ‘இலை’ திரைப்படம்..” என்றார்.

இந்த ‘இலை’ திரைப்படத்தை ஜெனீஷ் தனது ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனத்தின் வழியாக ஏப்ரல் 21 அன்று தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
error: Content is protected !!