‘ஜிவி’ படத்தின் கதாசிரியர் பாபு தமிழ் இயக்கும் புதிய திரைப்படம் ‘க்’

‘ஜிவி’ படத்தின் கதாசிரியர் பாபு தமிழ் இயக்கும் புதிய திரைப்படம் ‘க்’

தர்மராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘க்.’

வித்தியாசமான முறையில் ஒரேயொரு தமிழ் எழுத்தைத் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்தப் புதிய தமிழ்த் திரைப்படத்தில் யோகேஷ் என்பவர் நாயகனாக அறிமுகமாகிறார்.

இவருடன் நடிகர் குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ராதாகிருஷ்ணன், படத் தொகுப்பு – ராகுல், இசை – அவினாஷ் கவாஸ்கர், சண்டை இயக்கம் – ஃபயர் கார்த்திக், கலை இயக்கம் – கல்லை தேவா, நிர்வாக தயாரிப்பு – பினு ராம், மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

yokesh

அறிமுக இயக்குநரான பாபு தமிழ், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இயக்குநர் பாபு தமிழ், சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ள ‘ஜீவி’ திரைப்படத்திற்கு கதை-திரைக்கதை-வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உளவியல் ரீதியாக சிக்கி தவிக்கும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்க்கையை மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுபூர்வமாகவும் படமாக்க இருக்கிறார் இயக்குநர் பாபு தமிழ்.

anika kumaran

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்துவிடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன் பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது… எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான்.

அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா.. இல்லையா… என்பதை இத்திரைப்படம் முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமாக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் சொல்லவிருக்கிறது.

இந்த ‘க்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்க இருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை சென்னையிலும், சில குறிப்பிட்ட சிறப்பு காட்சிகளை வெளிநாட்டிலும் படமாக்கப்படவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.




error: Content is protected !!