‘இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..!

‘இட்லி’ திரைப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது..!

அப்பு மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் வித்யாதரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இட்லி’ திரைப்படம் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகுகிறது.  

அப்பு மூவிஸ் சார்பில் பாபு தூயயவன் மற்றும் G. கார்த்திக் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த நடிகை கல்பனா மற்றும் மனோபாலா, லொள்ளு சபா ஸ்வாமிநாதன் மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இசை – தரன், ஒளிப்பதிவு – கண்ணன், படத் தொகுப்பு – ஜெய் பிரவீன், கலை இயக்கம் – உமா ஷங்கர், உடை வடிவமைப்பு – பாண்டியன்.  

இந்தப் படம் வங்கியை கொள்ளையடிக்கும் மூன்று வயதான பெண்களை பற்றி கதையை கொண்டதாகும். காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்த சமூகத்துக்கு தேவையான கருத்துகள் படத்தின் இறுதியில் வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ‘இட்லி’ குடும்ப ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.