full screen background image

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 15-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில்..!

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா செப்டம்பர் 15-ம் தேதி நேரு ஸ்டேடியத்தில்..!

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தமிழ் பட உலக வரலாற்றில் மிக அதிக செலவில் உருவாகியிருக்கும் படம், ‘ஐ ‘. ‘தசாவதாரம்’, ‘அந்நியன்’, போன்ற பிரமாண்டமான படங்களை தயாரித்த ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன், ரூ.180 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்து இருக்கிறார். இதில், விக்ரம் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார். ஷங்கர் டைரக்டு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 15-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது. இந்த பட விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

விழாவில், ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவருடன், நடிகர் ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மலையாள நடிகர் சுரேஷ்கோபி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். ‘ஐ’ படத்தின் டைரக்டர் ஷங்கர், கதாநாயகன் விக்ரம், கதாநாயகி எமி ஜாக்சன், நடிகர் சந்தானம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஆகியோரும் பங்கு பெறுகிறார்கள்.

விழாவையொட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில், நடிகர்-நடிகைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

Our Score