பிரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘ஹெளரா பிரிட்ஜ்’..!

பிரியங்கா உபேந்திரா நடிக்கும் ‘ஹெளரா பிரிட்ஜ்’..!

‘தரமணி’  படத்தின் மூலம் தரமான வெற்றியை தந்த J.S.K. Film Corporation நிறுவனம் தனது அடுத்த வெளியீடாக ‘ஹௌரா பிரிட்ஜ்’ என்ற கன்னட படத்தினை வாங்கி, தமிழில் டப்பிங் செய்து வெளியிடுகிறது.

இதுவொரு திரில்லர் படமாகும். கன்னடத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் லோஹித் இயக்கியுள்ளார். இவர், ஏற்கெனவே கன்னடத்தில் ‘Mummy Save Me’ என்ற ஹிட் படத்தைக் கொடுத்தவர்.

பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள மற்றொரு சுவாரஸ்யமான கதை இது. தமிழில் இப்படத்தின் வசனத்தையும், பாடல்களையும் கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

priyanka upendhira

பிரியங்கா உபேந்திரா இப்படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துளார். ஐஸ்வர்யா என்கிற சிறுமி, ப்ரியங்காவின் மகளாக நடித்திருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவின் ஹூப்ளி நதியின் மீது கட்டப்பட்டிருக்கும் ஹெளரா பாலத்தை மையமாக வைத்து இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறதாம்.

”தரமணி’ படத்தை தயாரித்த பெருமையும், அதன் வெற்றியும் என்னை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி, திரை உலகில்  மேலும் தலை நிமிர்ந்து நடக்க செய்துள்ளது. வணிக ரீதியான வெற்றி மட்டுமில்லாமல் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் அடையாளத்தை தந்துள்ளது ‘தரமணி’.

‘ஹௌரா பிரிட்ஜ்’ எனது அடுத்த  தயாரிப்பாகும். ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை இது. இக்கதையோட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகரமாக இருந்ததால் படப்பிடிப்பை அங்கு நடத்தியுள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன்.

எங்களது ‘புரியாத புதிர்’ படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. மேலும் பல தரமான படங்களை தர என் நிறுவனத்தின் சார்பில் முனைப்போடு உள்ளேன்…” என்கிறார் தயாரிப்பாளரான J.சதிஷ் குமார்.