இயக்குநர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் ‘ஹிப் ஹாப்’ தமிழா நடிக்கும் புதிய படம்…!

இயக்குநர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் ‘ஹிப் ஹாப்’ தமிழா நடிக்கும் புதிய படம்…!

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார்.

பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் இயக்குநர் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் இதில் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த், வினோத், குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை – ‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங், படத் தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ், நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக  தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.HHT2

இப்படத்தை அறிமுக இயக்குநர் D.பார்த்திபன் தேசிங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணி புரிந்தவர்.

இந்தப் படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டன. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயதுவரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும்.

காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

நாயகன் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளன. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும்.




error: Content is protected !!