“நாயிடம் கடிபட்டதுதான் இந்தப் படத்தில் மறக்க முடியாத விஷயம்..’ – ஹீரோயின் சுஷ்மா ராஜின் பேட்டி

“நாயிடம் கடிபட்டதுதான் இந்தப் படத்தில் மறக்க முடியாத விஷயம்..’ – ஹீரோயின் சுஷ்மா ராஜின் பேட்டி

இசையமைப்பாளர், நடிகர், மற்றும் தயாரிப்பாளருமான விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் N.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ், பசுபதி, மனோபாலா, ஜகன், MS பாஸ்கர் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘இந்தியா பாகிஸ்தான்’.

India-Pakistan-Movie-Poster-1

தெலுங்கில் ‘மாயா’ என்ற படம் மூலம் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சுஷ்மா ராஜ், அசப்பில் இளம் வயது அனுஷ்கா போலவே இருப்பதால் எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறார். இவர் தமிழில்  ‘இந்தியா பாகிஸ்தான்’ படம் மூலம்  அறிமுகமாகிறார்.  இந்தப் படம் வரும் மே 8-ம் தேதி வெளியாகவுள்ளது.

தன்னுடைய முதல் பட அனுபவத்தை பற்றி கூறுகிறார் சுஷ்ரமா ராஜ்.

“இந்தியா பாகிஸ்தான்’ படத்தின் மூலம் நான் தமிழில் அறிமுகமாவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பெங்களூருவில் ஃபேஷன் டிசைனிங் முடித்துவிட்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்தேன். அப்படங்களை பார்த்து இந்த வாய்ப்பு எனக்களித்தார் இயக்குனர் ஆனந்.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு தைரியமான பெண் கதாப்பாத்திரம். படத்தில் நானும் விஜய் ஆண்டனி சாரும் சண்டை போட்டுக் கொண்டே இருப்போம். நடிப்பில் முன் அனுபவம் இருந்ததால் அனைத்து காட்சிகளையும்  முதல் டேக்கிலேயே முடித்தேன்.    

தமிழ் எனக்கு அதிக பரீட்சயமான மொழி, இப்படத்தில் நடிக்கும் பொழுது மொழி ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. எனினும் ஓரு நீதிமன்ற காட்சியில் சுத்த தமிழில் பேசுவது மிகவும் கடினமாய் இருந்தது. ‘பல கோடி பெண்களில்’ என்ற பாடலுக்கு நானே உடைகளை வடிவமைத்தேன். அனைவரும் அப்பாடல் காட்சியை வெகுவாக பாராட்டினர். அனைவரும் என்னை அனுஷ்கா சாயலில் இருக்கிறேன் என்று சொல்வது மிகவும் நல்ல விஷயமாகாவே நான் பார்க்கிறேன்.

நாய்கள் என்றாலே எனக்கு பயம். படத்தில் ஒரு பெண்ணுக்கு பேயோட்டும் காட்சி படமாக்கும்போது நாய் என் மீது தாவி என்னை கடித்ததில் நான் கீழே விழுந்துவிட்டேன். மேலும் இப்படத்தில் நடித்ததை மறக்கவே முடியாத அளவிற்கு ஒரு சம்பவமாய் இது அமைந்தது.

இப்படத்தில் மனோபாலா, M.S. பாஸ்கர் ஆகியோருடன் நடித்தது மறக்கவே முடியாது அவர்களிடம் எப்படி நடிப்பது என்று கற்றுக் கொண்டேன். மிகவும் நல்ல மனிதர் விஜய் ஆண்டனி சார் யாரிடமும் ஒரு வார்த்தை அதிகமாய் பேசமாட்டார், நகைச்சுவை உணர்வுமிக்கவர். ‘இந்தியா பாகிஸ்தான்’  படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய ஒரு பொழுது போக்கு திரைப்படம்.. அவசியம் பாருங்கள்..” என்கிறார்.