அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி..!

அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கும் ஹன்சிகா மோத்வானி..!

தமிழ் சினிமாவுக்கு எப்போதும் சிறந்த திறமைசாலிகளை அறிமுகப்படுத்தும் தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ், தற்போது ஹன்சிகா மோத்வானி, முதன்மை கதாப்பாத்திரத்தில்  நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது.

இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, இந்தப் படத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா. இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார் ஹன்சிகா.

‘மசாலா படம்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ஜமீல், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஜமீல், “தற்போது தமிழ்ச் சினிமாவில் அதிகமாகியிருக்கும் நாயகிகளை மையப்படுத்திய கதைகளுக்கான ட்ரெண்டும், ரசிகர்கள் மத்தியில் குறையாத ஹன்சிகாவின் புகழும்தான் இந்த படம் உருவாக முக்கிய காரணம்.

மிகுந்த பொறுப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிற இந்த கதாபாத்திரத்துக்கு என்னுடைய முதன்மையான தேர்வாக ஹன்சிகா இருந்தார்.

அவருடன் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்திருக்கிறேன்,  அவர் என்னை பெரிதும் ஈர்த்திருக்கிறார். அதனாலேயோ என்னவோ இந்தக் கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது.

மேலும், கமர்ஷியல் மற்றும் தொழில் நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராக இருக்கிறது. ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் கமர்ஷியலாக திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறோம்.

இந்தக் கதையில் இன்னும் சில  கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம்.

ஜியோ ஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா இருவருமே சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை எனக்குத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்…” என்றார்.




error: Content is protected !!