காரைக்காலில் தொடங்கிய இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’யின் பயணம்..!

காரைக்காலில் தொடங்கிய இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’யின் பயணம்..!

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘ஜிப்ஸி.’

இந்தப் படத்தை ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில்  தயாரிப்பாளர் S.அம்பேத்குமார் தயாரிக்கிறார்.

இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இமாசல பிரதேச அழகி நடாசா சிங் நாயகியாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ‘அருவி’ படத்தின் எடிட்டரான ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்’ படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராஜு முருகன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை காரைக்காலில் தொடங்கியது. ‘கீ’, ‘கொரில்லா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகும் ‘ஜிப்ஸி ’ படத்திற்கு படப்பிடிப்பு தொடங்கிய தருணத்திலேயே பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படபிடிப்பு இமாசல பிரதேசத்தில் நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத்குமார் தெரிவித்திருக்கிறார்.