full screen background image

யோகி பாபு நடிக்கும் ‘கூர்கா’ கோடை விடுமுறையில் வெளியாகிறது..! 

யோகி பாபு நடிக்கும் ‘கூர்கா’ கோடை விடுமுறையில் வெளியாகிறது..! 

நடிகர் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘கூர்கா’.

இந்தப் படத்தை இயக்குநர் சாம் ஆண்டன் தனது நண்பர்களோடு இணைந்து 4  மங்கீஸ் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரித்து இயக்கியிருக்கிறார். 

ராஜ் ஆர்யன் இசையமைக்க, கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத் தொகுப்பை கவனிக்கிறார்.

காமெடி மற்றும் ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது இந்த ‘கூர்கா’ திரைப்படம். ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி  கூர்காவும், அவரது நாயும் எப்படி கண்டு பிடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக் கரு.

இப்போது ‘கூர்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை மிகக் குறுகிய காலத்திலேயே முடித்து விட்டனர்.

இது பற்றி இயக்குநர் சாம் ஆண்டன் பேசுகையில், “இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக் குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குநர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி.

‘கூர்கா’ கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர்.  நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக அளித்தனர். ‘கூர்கா’ கோடை கால விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்…” என்றார்.

Our Score