‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கிப்ட் பாடலை பெற்றுக் கொண்ட பிரபலங்கள்..!

‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் கிப்ட் பாடலை பெற்றுக் கொண்ட பிரபலங்கள்..!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனமும், ரமாணியம் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த நடித்துள்ளனர்.

இசை – நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு – பி.கே.வர்மா, படத் தொகுப்பு – ஜெய், கலை இயக்கம் – கே.கதிர், சண்டை பயிற்சி – அன்பறிவு, நடனம் – சதீஷ், பாடல்கள் – கபிலன், தயாரிப்பு மேற்ப்பார்வை – வைரம் சங்கர், தயாரிப்பு – ரமாணியம் டாக்கீஸ், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பத்திரிகையாளர் த.செ.ஞானவேல்.

Kootathil-Oruthan-Poster-1

இந்தப் பாடல் பற்றியும், படம் பற்றியும் பேசிய பத்திரிகையாளர் த.செ.ஞானவேல், “இந்தப் படத்தில் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஆல்பம் ஹிட்டாக வெற்றி பெற்றுள்ளது.  கவிஞர் கபிலனின் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களுமே மிகச் சிறப்பாக வந்துள்ளன. 

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்கிற Gift Song  ‘ஆட்டோகிராப்’ படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலைப் போல மோட்டிவேஷனல் பாடலாக இருக்கும்.  இப்பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் அனைத்தும் அனைவரையும் ஊக்குவிக்கும் வரிகளாக அமைந்துள்ளது.

இப்பாடலில் வரும் வரியான ‘உன் கேள்விக்கு விடை நீயடா… மண்பானையாய் உடையாதடா…’ ‘தோல்வியெல்லாம் தோல்வியல்ல… வெற்றி  என்றும் தூரமல்ல…’ போன்ற வரிகள் அனைவருக்கும் பாஸிட்டிவான ஒரு விஷயத்தை கொடுக்கக் கூடிய வரிகளாக இருக்கும். 

இப்பாடலை படமாக்கும்போதே எல்லோரும் இப்பாடல் அருமையாக உள்ளது என்று பாராட்டினார்கள். அப்போது நாங்கள் யோசித்த விஷயம்தான் இந்த Gift Song. படத்துக்குள்ளே மட்டும் இந்த பாடலை வைக்காமல், இதை ஒரு ப்ரோமோ பாடலாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். 

எப்படி ‘கொலை வெறிடி’ பாடல் ஒரு சூப் சாங்காக இருந்ததோ, அதே போல் இது Gift Song என்று எல்லோராலும் கொண்டாடப்படும் பாடலாக இருக்கும். இப்பாடலை நாங்கள் உருவாக்கிய நேரத்தில்தான் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தது. மாற்றங்கள் ஒன்றே மாறாதது என்ற இந்த விஷயத்தை எடுத்துக்கொண்டு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முதல் சாதாரண மனிதர்கள்வரை அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு மாற்றத்தை பற்றி சொல்லக் கூடிய அழகான கிப்ட் ஒன்றை வழங்கினோம். 

அந்த பாடலை வருகிற ஜூன் 20-ம் தேதியன்று விஷுவலாக வெளியிடுகிறோம். இந்த பாடலில் இடம் பெற்றுள்ள விஷுவல்ஸ் எதுவும் படத்தில் இடம் பெறாது. படத்துக்கென்ற தனியாக நாங்கள் வேறு விஷுவல்ஸை படமாக்கியுள்ளோம். 

இந்தப் பாடலில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனரான நடிகர் சிவக்குமார், நடிகர் சூர்யா, ஆர்யா, சிவகார்த்திகேயன், நாசர், பிரகாஷ் ராஜ், விஷ்ணு விஷால், சமுத்திரக்கனி, ஆர்.ஜே. பாலாஜி, அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், நிவாஸ் கே.பிரசன்னா, செப் தாமு, ரம்யா நம்பீசன், வி.ஐ.டி. கல்லூரி மாணவர்கள்  போன்ற பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர். இப்பாடல் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

இதுவரை தமிழ் சினிமாவில் முதல் பெஞ்ச் மாணவர்கள், கடைசி பெஞ்ச் மாணவர்கள் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளது. இப்படம் கொஞ்சம் வித்தியாசமாக மிடில் பெஞ்ச் மாணவர்களைப் பற்றி பேசும் படமாக இருக்கும். இந்த உலகத்தில் பெரும்பான்மையானவர்கள் மிடில் பெஞ்சர்ஸ்தான். அவர்களை கொண்டாடும் படமாக இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படம் இருக்கும்…” என்றார் இயக்குநர் த.செ.ஞானவேல்.




error: Content is protected !!