full screen background image

10 நிமிடத்தில் விற்பனையானது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம்

10 நிமிடத்தில் விற்பனையானது ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ திரைப்படம்

தயாரிப்பாளர் டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் இந்த வருடம் தனது வெள்ளி விழாவை கொண்டாடுகிறது. இதன் பொருட்டு இந்தாண்டு 3 படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இதில் முதல் படமாக ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்கிற படத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தப் படத்தில் அதர்வா முரளி ஹீரோவாக நடித்திருக்கிறார். ரெஜினா கேஸண்ட்ரா, அதீதி போஹன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் நடிகர் சூரி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. கலைவாணர் அரங்கம் மீண்டும் கட்டப்பட்ட பின்பு முதன்முதலில் நிகழ்த்தப்படும் சினிமா கலை நிகழ்ச்சி இதுவேயாகும்.

IMG_8683

இந்த வண்ணமயமான விழாவில் படத்தில் பங்கு கொண்ட நட்சத்திரங்களுடன் சிறப்பு அழைப்பார்களாக எண்ணற்ற திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் நாசர், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அபிராமி ராமநாதன், அருள்பதி, செல்வின், இயக்குநர்கள் விக்ரமன், ஆர்.கே.செல்வமணி, தனஞ்செயன் மற்றும் பலரும் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்து வாழ்த்தி பேசினார்கள்.

IMG_8673

முதலில் வரவேற்று பேசிய தயாரிப்பாளர் டி.சிவா, “இந்தப் படத்தின் டபுள் பாசிடிவ் காட்சியை பார்த்த 10-௦வது நிமிடத்தில், இப்படத்தின் வியாபாரம் முடிந்தது. படத்தை தமிழகமெங்கும் ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கே. சிதம்பரம் வெளியிடுகிறார்…” என்றார் சந்தோஷமாக.

விழாவில் பெப்சி அமைப்பின் தலைவரான இயக்குநர் ஆர்.கே. செல்வமணியின் பேச்சில் சூடு பறந்தது.

ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “தமிழ்நாட்டில் நமது தாய் மொழியான தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களுடைய படத்தின் தலைப்பை தமிழில்தான் வைக்க வேண்டும். அதே சமயம், வெறும் வரி விலக்குக்காக தமிழில் பெயர் வைக்கக் கூடாது. தமிழ் மொழியின் மேல் கொண்ட பற்றோடுதான் தமிழ் தலைப்புகளை வைக்க வேண்டும்.

IMG_8661 

‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு மிகச் சிறப்பானது. ஆனால் இதை ‘GGSR’ என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும்.

இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் தயவு செய்து அதனை திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு அவர் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போது எனக்கே பொறாமையாக உள்ளது.

எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா கிரியேஷன்ஸ் சிவாதான். அவர்தான் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவூத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார்.  அந்த படம் இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவூத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா ஸார்தான். அவருக்கு நான் எப்போதும் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

படத்தின் டபுள் பாஸிட்டிவ் பார்த்த 10 நிமிடங்களிலேயே விநியோகஸ்தர் சிதம்பரம் இந்தப் படத்தை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்ததாக சிவா ஸார் சொன்னார். இது நிச்சயம் பாராட்டுக்குரியது.

சிதம்பரம் சார் உங்களுக்கு பணம் கொடுத்தார் என்றால், சிதம்பரம் சாருக்கு மன்னர் பிலிம்ஸ் பணம் கொடுக்க வேண்டும். மன்னருக்கு, அபிராமி ராமநாதன் சார் பணம் கொடுக்க வேண்டும். அபிராமி ராமநாதன் சாருக்கு மக்கள் பணம் கொடுக்க வேண்டும்.

இந்த சுழற்சி நன்றாக இருந்தால்தான் சினிமா நன்றாக இருக்கும். அந்த சுழற்சியை நன்றாக கொண்டு வரும் அமைப்பாக, நீங்கள் அனைவரும் இங்கு இருக்கிறீர்கள். அதை நீங்கள் எல்லோரும் சரியாக செய்ய வேண்டும்.

IMG_8508

தமிழ் சினிமா நன்றாகத்தான் உள்ளது. ஆனால் தமிழ் திரைப்பட துறைதான் நன்றாக இல்லை. தயாரிப்பாளர்கள் நான்றாக இருந்தால்தான் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்.

நாம் அனைவரும் சண்டை போட்டால்கூட சினிமாவை காப்பாற்ற முடியாத நிலைமையில் நாம் இப்போது இருக்கிறோம். எல்லோரும் ஒன்றாக இருக்கும்போதே சினிமாவை காப்பாற்ற முடியவில்லை. இப்போது எல்லோருக்கும் பலவிதமான கருத்துக்கள் உள்ளன.

ஒரு தயாரிப்பாளருக்கு போட்ட முதல் ஒரு படத்தில் வரவில்லை என்றால் அடுத்த படம் எடுப்பது கஷ்டமான ஒன்றாக உள்ளது. அதை சரியாக பண்ண வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவருக்கும் இருக்கிறோம் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் 25% தயாரிப்பு செலவை நாங்கள் குறைத்துள்ளோம். இது தயாரிப்பாளர்களுக்கு நாங்கள் செய்துள்ள சேவை.

தயாரிப்பாளருக்கு வருமானம் வரக் கூடிய வாசல்கள் அனைத்துமே இப்போது அடைக்கப்பட்டுவிட்டன. தியேட்டரில் மட்டும்தான் இப்போது வருமானம் வருகிறது.

IMG_8512

நான் ஒரு தியேட்டரில் படம் பார்க்க சென்றேன். 120 ருபாய் படத்தின் டிக்கெட். ஆன்லைனில் என்னிடம் கூடுதலாக 60 ரூபாய் சேர்த்து 180 ரூபாயாக கலெக்ட் செய்கிறார்கள். மொத்தம் நான்கு டிக்கெட் புக் செய்தேன். என்னிடம் 600 ரூபாய் வாங்கினார்கள். நான் என்னுடைய குழந்தைகளுடன் படத்துக்கு சென்றேன். மொத்தம் 1200 ரூபாய் கேன்டீன் சார்ஜெஸ் உடன் சேர்த்து வந்தது. படம் முடித்து வந்த பிறகு பார்க்கிங்கில் 160 ருபாய் வாங்கினார்கள். இப்படி குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க மொத்தமாக 2400 ரூபாய் செலவாகிறது.

ஆனால் இதிலிருந்து தயாரிப்பாளர்களுக்கு வெறும் 240 ரூபாய்தான் லாபமாக வருகிறது. மீதியெல்லாம் எங்கே செல்கிறது..? யாரிடம் போய்ச் சேர்கிறது..? முதலில் இதனை சரி செய்ய வேண்டும். இவற்றில் இருந்தும் தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் லாபத்தை பெற்றுத் தர வேண்டும். அனைத்து வர்த்தக சபைகளும் ஒன்றாக இருந்து இதனை சரி செய்ய வேண்டும்…” என்றார் ஆர்.கே.செல்வமணி.

இந்த ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழாவும் இதே மேடையில் நடந்தது.

இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன்,  ரெஜினா கேஸண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Our Score