சீ.வி.குமார் இயக்கும் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம்..!

சீ.வி.குமார் இயக்கும் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படம்..!

இன்று  தமிழ்த்  திரையுலகில்  முன்னணி   இயக்குநர்களாக   இருக்கும்           பல  இயக்குநர்களை தனது தயாரிப்பு  நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்  மூலமாக  அறிமுகபடுத்தி  தமிழ்  சினிமாவில்  புதிய  அத்தியாத்தை  உருவாக்கியவர்  தயாரிப்பாளர் சீ.வி.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் ‘மாயவன்’ வெற்றி  படம் மூலமாக இயக்குநராகவும் தன்னை முன் நிறுத்தியவர். 

மாயவன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது,  திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்  தயாரிப்பில் ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்னும் புதிய படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் நாயகியாக பிரயங்கா ருத் நடிக்கிறார். மேலும், வேலு பிரபாகரன்,  டேனியல்  பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள்,  இயக்குநர்  ராமதாஸ்  ஆகியோரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – கார்த்திக் தில்லை, இசை – ஹரி டவுசியா, படத் தொகுப்பு –ராட் கிரிஷ், கலை இயக்கம் – விஜய் ஆதிநாதன், சண்டை பயிற்சி –ஹரி தினேஷ், மக்கள் தொடர்பு – நிகில், டிசைனர் – கண்ணதாசன்,   தயாரிப்பு –திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட், எழுத்து, இயக்கம் – சீ.வி.குமார்.

தற்போது ‘கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தின்  படப்பிடிப்பு  துரிதமாக நடைபெற்று  வருகிறது.




error: Content is protected !!