ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் ‘கே புரொடக்ஷன்ஸ்’. இந்நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார்  நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் ‘சீமத்துரை’, ‘96’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில்  வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா இருவரும் நடிக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் ‘அண்ணனுக்கு ஜே’, ‘வெள்ளை யானை’ படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத் தொகுப்பை எஸ்.இளையராஜா கவனிக்கிறார்.

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்த, மதிமாறன் புகழேந்தி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக இத்திரைப்படம் தயாராக இருக்கிறது.

இந்தப் படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் இருக்கும் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.




error: Content is protected !!