ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தின்  ‘ஃபர்ஸ்ட் லுக்’ பொங்கல் தினத்தில் ரிலீஸ்

ஜி.வி.பிரகாஷின் புதிய படத்தின்  ‘ஃபர்ஸ்ட் லுக்’ பொங்கல் தினத்தில் ரிலீஸ்

வரும் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் காதல், காமெடி, திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் இன்றைய கோலிவுட்டின் பரபரப்பான ஹீரோவான ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷ் இப்போது இதுவரையிலும் தான் நடித்த படங்களின் சிறு சாயல்கூட இல்லாத அவருக்கேற்ற ஒரு பக்கா கமர்ஷியல் படத்தில் நடித்து வருகிறார்.

Common man presents சார்பில் ‘ஆரஞ்ச் மிட்டாய்’, ‘றெக்க’ படங்களை தயாரித்த பி.கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.  

அதர்வா நடித்து வெளிவந்த, மாபெரும் வெற்றிப் படமான ‘ஈட்டி’ படத்தின் இயக்குநரான ரவி அரசு இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கான ஃபோட்டோ ஷுட் புத்தாண்டின் முதல் நாளான 10-ம் தேதி நுங்கம்பாக்கம் செட் ஃபேரில் நடந்தது.

ஃபோட்டோ ஷுட் முடிந்து, எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்த ஹீரோ ஜி.வி.பிரகாஷ், தன் மகிழ்ச்சியை இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் பரிமாறிக் கொண்டார்.

இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளனர்.

இணை தயாரிப்பு – சுபா கணேஷ், மக்கள் தொடர்பு – பி.கோபிநாதன்