24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

24 மணி நேரத்தில் நடக்கும் கிரைம் திரில்லர் ‘எதிர் வினையாற்று’

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிரைம், திரில்லர் வகை படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் முழுக்க, முழுக்க வித்தியாசமான கதைக் கருவுடன் திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையில் ‘எதிர் வினையாற்று’ படம் உருவாகி உள்ளது.

இந்தப் படத்தைத் தாயின் அருள் புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் அலெக்ஸ் தயாரித்து, அவரே இதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்களான அலெக்ஸ்  மற்றும் இளமைதாஸ். நாயகன் அலெக்ஸ் மருத்துவத்தில் முதுநிலை  பட்டம் பெற்ற  அவசர  சிகிச்சை  மருத்துவ  நிபுணர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் நாயகியாக சனம் ஷெட்டியும்,  அசிஸ்டெண்ட்  கமிஷனராக ஆர்.கே.சுரேஷும் நடித்துள்ளனர். கதைக்கு  மிகவும்  முக்கிய  திருப்பம்  ஏற்படுத்தும்  ஒரு கதாபாத்திரத்தில் ‘ஆடுகளம்’ நரேன்  நடித்துள்ளார்.

இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்துள்ளார். மேலும் சம்பத்ராம், அனுபமா குமார், ஜீ டிவி மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி  ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசை – ஷெரீப், அருவி  புகழ்  வேதாந்த்  பரத்வாஜ்  இசையில்  ஒரு  மெல்லிசை  பாடல் உருவாகி  இருக்கிறது. ஒளிப்பதிவு – மனோஜ் நாராயணன், படத் தொகுப்பு – சந்திரசேகரன், கலை இயக்கம் – பாலா ஓம் பிரகாஷ், தயாரிப்பு – தாயின்  அருள்  புரொடக்‌ஷன்ஸ், இயக்கம் – அலெக்ஸ், இளமைதாஸ்.

சென்னையில்  2  ஆண்டுகளுக்கு  முன்னர்  நடந்த  ஒரு உண்மைச்  சம்பவத்தை  அந்த  நபரின் அனுமதியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

ஒரு இரவு தொடங்கி அடுத்த நாள் இரவுக்குள்  24  மணி  நேரத்தில்  நடக்கும்  சம்பவங்களே விறுவிறுப்பான  திரைக்கதையாகி  உள்ளது.

எந்த வம்புக்கும் செல்லாமல் ‘தான் உண்டு; தன் வேலை உண்டு’ என்று இருக்கும் ஒரு புகைப்படக் கலைஞன்,  ஒரு  நள்ளிரவு  பயணத்தில்  எதிர்பாராதவிதமாக ஒரு  பெண்ணைக் காப்பாற்றுகிறான். 

இதைத் தொடர்ந்து அந்தப்  பெண்ணுடன்  சேர்ந்து  அவள்  கொண்டு  வரும் சிக்கல்களும் அவனைப்  பின்  தொடர்கின்றன.  சாதாரண  இளைஞனான  அவன் மிகவும்  அசாதாரணமான சூழ்நிலையை சந்திக்கும் நிலைக்குத்  தள்ளப்படுகிறான். அதில்  இருந்து  அவன்  எப்படி மீள்கிறான்  என்பதே இந்த ‘எதிர்  வினையாற்று’ படத்தின் கதை.




error: Content is protected !!