full screen background image

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து மற்றொரு இசையமைப்பாளரும் வருகை..!

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து மற்றொரு இசையமைப்பாளரும் வருகை..!

அலெக்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் காமெடி கலந்த பேய் படம் ‘என்னமா கத வுடறானுங்க.’

மும்பையை சேர்ந்த அர்வி இப்படத்தை தயாரித்து அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். நாயகிகளாக அலிஷா சோப்ரா, ஷாலு நடித்துள்ளனர். இவர்களுடன் அம்பிகா, சீதா, செந்தில், மயில்சாமி, சாம்ஸ், ஜி.எம்.குமார், ரவிமரியா, அனுமோகன், சிங்கமுத்து, மதன்பாப் மற்றும் சிசர் மனோகர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சிவ பாஸ்கர், படத் தொகுப்பு – நிர்மல், இசை – ரவி விஜய் ஆனந்த்,  பாடல்கள் – சிநேகன், ராகுல், கவி பாஸ்கர், சொல்லாடு முருகன், சண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, நடன இயக்குநர் – அக்‌ஷய் ஆனந்த், மக்கள் தொடர்பு – கோபி, இயக்குநர் – ஃபிரான்சிஸ் ராஜ், தயாரிப்பு – அர்வி.

இசைஞானியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளையராஜாவின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு இசையமைப்பாளர் தமிழ் சினிமாவிற்கு இந்தப் படத்தின் மூலமாக களமிறங்கியுள்ளார். இளையராஜாவின் அக்கா மகனான ரவி விஜய் ஆனந்த், இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் ப்ரோமோ பாடலை நேற்று வெளியிட்டார்கள். பேய் சம்பந்தப்பட்ட பாடலான இதை இயக்குநர் வெங்கட் பிரபு பாடியுள்ளார். மேலும் இந்த பாடலில் மொத்தம் 35 நடிகர்கள் தோன்றி நடனமாடியுள்ளார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோரும் இப்படத்தில் பாடல்களை பாடியுள்ளார்கள்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் மாதம் இப்படத்தின் இசையை வெளியிடவுள்ளனர்.

Our Score