full screen background image

வருகிறது ‘இங்கிலீஷ் படம்’ என்கிற பேய்ப் படம்..!

வருகிறது ‘இங்கிலீஷ் படம்’ என்கிற பேய்ப் படம்..!

ஆர்.ஜே. மீடியா  கிரியேஷன்ஸ்   சார்பில் ஆர்.ஜே.எம்.வாசுகி  தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இங்கிலிஷ் படம்.’

இப்படத்தை புதுமுக  இயக்குநர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ராம்கி கதாநாகனாக நடித்துள்ளார், மீனாட்சி, ஸ்ரீஜா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன்  சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா, சஞ்சீவ் இன்னும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு சாய்சதிஷ், படத் தொகுப்பு மகேந்திரன், கலை – பழனிவேல், பின்னணி இசை – நௌசாத்.

இப்படம் பற்றி இயக்குநர் குமரேஷ் குமார் பேசும்போது, “இத்திரைப்படத்திற்கு ‘இங்கிலிஷ் படம்’ என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

நடிகர் ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். இதுவரையிலும் நீங்கள் பார்க்காத ராம்கியை இந்தப் படத்தில் நீங்கள் காணலாம்.  கதைப்படி வட சென்னையின் தாதாவான ராம்கி ஏரியாவில்  ஒரு  வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு  விற்பதற்கு முயற்சி செய்கிறார்.  

raamki

அந்த    வீட்டில் பேய்  இருப்பதாக  பலராலும் நம்பப்பட, அந்த வீட்டை வாங்க வரும் நபர் வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால்  வீட்டை  வாங்கி கொள்வதாக சொல்கிறார்.

எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய  ராம்கி களத்தில் இறங்க அதில் அவர் மிக பெரிய ஆபத்தில் சிக்கிக் கொண்டு யாரும் எதிர்பாராதவிதமாக   ராம்கியின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது,  

அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு காட்சியும் மிகுந்த ரகளையாக முற்றிலும் காமெடி கலந்த  ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம். இந்தப் படம்  ராம்கியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும். இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரைக்கு வர உள்ளது…” என்றும் கூறினார்.   

Our Score