‘எங்க காட்டுல மழை’ படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

‘எங்க காட்டுல மழை’ படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்

வள்ளி பிலிம்ஸ் தயாரிப்பில் ‘குள்ள நரிக் கூட்டம்’ வெற்றிப் படத்தின் இயக்குநரான ஸ்ரீபாலாஜி, அடுத்து இயக்கும் புதிய படம் ‘எங்க காட்டுல மழை.’ 

இந்தப் படத்தில் மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இயக்கம் – ஸ்ரீபாலாஜி, இசை – ஸ்ரீவிஜய், ஒளிப்பதிவு – ஏ.ஆர்.சூர்யா, படத் தொகுப்பு – ஜெஸ்டின் ராய், கலை – முனி பால்ராஜ், பாடல்கள் – சினேகன், நா.முத்துக்குமார், பிரம்மா, விஜய்சாகர், பாடியவர்கள் – ரஞ்சித், கார்த்திக், முகேஷ், சுஜீத், ஹரிசரன், கானா பாலா, சுகன்யா, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு நிர்வாகி – விஸ்வநாதன்.

enga kaattula mazhai movie

‘எங்க காட்டுல மழை’ படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.

படத்தின் முன்னோட்டத்தை நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் நாளை டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள்.

இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘எங்க காட்டுல மழை’ படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
error: Content is protected !!