மகிழ் திருமேனியின் சீடர் இயக்கும் ‘எம்பிரான்’ திரைப்படம்..!

மகிழ் திருமேனியின் சீடர் இயக்கும் ‘எம்பிரான்’ திரைப்படம்..!

பஞ்சவர்ணம் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பஞ்சவர்ணம் மற்றும் சுமலதா இணைந்து தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘எம்பிரான்’.

இப்படத்தின் நாயகன் ரேஜித். இவர் விக்ரமன் இயக்கிய ‘நினைத்தது யாரோ’ படத்தில் நடித்தவர். நாயகியாக பெங்களூரைச் சேர்ந்த ராதிகா பிரித்தி நடிக்கிறார். இவர்களோடு சேர்ந்து மௌலி, கல்யாணி நடராஜன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – புகழேந்தி, இசை – பிரசன் பாலா, பாடல்கள் – கவிஞர் வைரமுத்து, கபிலன் வைரமுத்து, படத் தொகுப்பு – மனோஜ், கலை – மாயவன், சண்டை பயிற்சி – டான் அசோக், நடனம் – தீனா, விஜி. 

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கிருஷ்ண பாண்டி. இவர் ‘தடையற தாக்க’, ‘மீகாமன்’ போன்ற வெற்றி படங்களை தந்த இயக்குநர் மகிழ் திருமேனியிடம் உதவியாளராக இருந்தவர். 

திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோவா, பாண்டிச்சேரி  மற்றும் ஹைதராபாத்தில்  நடந்து முடிந்துள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

‘எம்பிரான்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவிருக்கிறது..!