ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படம்

லைகா புரோடக்சன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜீ.வி.பிரகாஷ் குமார், ஆனந்தி நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு.’

‘டார்லிங்’ பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் இது. ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணைந்து நடிக்கிறார்.

மேலும், ‘பருத்தீ விரன்’ சரவணன், விடிவி கணேஷ், கருணாஸ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், யோகி பாபு, நிரோஷா, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தயாரிப்பு – லைகா புரோடக்ஷன்ஸ், இயக்கம் – சாம் ஆண்டன், ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், படத்தொகுப்பு – ஆண்டனி ருபன், இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார், உடை வடிவம் – ஜாய் கிரிசில்டா, நடனம் – பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – திலிப் சூப்புராயன், தயாரிப்பு நிர்வாகம் – பிரேம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் அவர்களின் ஆசி பெற்று இப்படத்தின் படபிடிப்பு துவங்கியது.

இப்படத்திற்காக வித்தியாசமான அதேநேரம் சுவரஸ்யமான ஒரு சண்டை காட்சி சென்னை மோகன் ஸ்டுடியோவில் பெரும் பொருட்செலவில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.

பல படங்களில் வில்லன்களாக நடித்த மன்சூர் அலிகான், பொன்னம்பலம், மொட்டை ராஜேந்திரன் ஆகியோருடன் சரவணன், கருணால், விடிவி கணேஷ், யோகி பாபு ஆகியோரும் இந்தக் காட்சியில் நடித்தனர்.

சூப்பர் சூப்புராயன் மேற்பார்வையில் படமாக்கப்பட்ட சண்டை காட்சியில் மன்சூர் அலிகான் நடித்த பிரபல வேடமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் வில்லன் வேடத்திலும், பொன்னம்பலம் நடித்த பிரபல வேடமான ‘நாட்டாமை’ படத்தின் வில்லன் வேடத்திலும் நடித்தனர்.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இந்த படபிடிப்பு மாலை 6 முதல் காலை 6 வரை தொடர்ந்து நடைபெற்றது.

‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’ என்கிற எம்.ஜி.ஆர். படத்தின் பாடல் கானா பாலா குரலில் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையில் இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டது.

படப்பிடிப்பு முடிவடையவிருக்கும் இந்த ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு’ படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கவுள்ளது.