‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளரான Mr. X யார்..?

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளரான Mr. X யார்..?

தமிழக ரசிகர்கள் உள்ளங்களில்  தற்போது காட்டுத்  தீ போல பரவி வரும் ஒரு கேள்வி, கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்  ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதுதான்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷ் – மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தள்ளி போகாதே’ புகழ் தாமரையின் வரிகளில், சிட் ஸ்ரீராமின்  மெய் சிலிர்க்கும் குரலில் உதயமான ‘மறு வார்த்தை’ பாடல், இசை பிரியர்கள் மட்டுமின்றி  பொதுவான ரசிகர்களின்  உள்ளங்களையும் கவர்ந்து சென்று  இருக்கின்றது.

இந்த நேரத்தில்தான் பரபரப்பான அந்த கேள்வி தமிழ்ச் சினிமா ரசிகர்களிடையே எழுந்தது. படத்தின் போஸ்டர்களிலும், வீடியோக்களிலும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்று குறிப்பிடவே இல்லை என்பதுதான் அது.. ஆகவே, இப்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தேடும் பணியில் ரசிகர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் இன்னும் மூன்று நாட்களில்  ‘நான் பிழைப்பேனோ’  என்னும்  இந்த படத்தின் மற்றொரு பாடல்  வெளியாக  இருக்கின்றது.

அந்த Mr. X யார் என்பதை சீக்கிரம் கண்டு பிடித்தாக வேண்டும் என்று ரசிகர்கள் தேடியலையும் நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் இசையமைப்பாளர்  ‘Mr. X’-ஐ சமுக வலைத்தளங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார்.  

Mr. X இன் டிவிட்டர் கணக்கு:  @Mr_X_Music

Mr. X இன் பேஸ்புக் பக்கம்:   https://www.facebook.com/MrXOffl/

அடுத்த மூன்று நாட்கள்வரைதான் Mr. X இந்த சமுக வலைத்தள முகவரிகளில் செயல்படுவாராம்.




error: Content is protected !!