‘அங்காடி தெரு’ மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’

‘அங்காடி தெரு’ மகேஷ் – ஷாலு நடிக்கும் ‘என் காதலி சீன் போடுறா’

சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஜோசப் பேபி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘என் காதலி சீன் போடுறா.’

இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ்   நாயகனாக  நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல்,  டாக்டர் சரவணன்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெங்கட், இசை – அம்ரீஷ், பாடல்கள் – ராம்சேவா, ஏகாதசி, கலை – அன்பு, நடனம் – சாண்டி, T.முருகேஷ், சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, படத் தொகுப்பு – மாரி, தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி, தயாரிப்பு – ஜோசப் பேபி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம் ஷேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை வளசரவாக்கம் ஏ.ஆர்.எஸ். கார்டனில் நடைபெற்றது.

இந்த விழாவில்  ஹீரோ அங்காடி தெரு மகேஷ், நாயகி ஷாலு, விஜய் டிவி கோகுல், டாக்டர் சரவணன், இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் திரைப்படத்தில் பங்கு கொள்ளும் அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா இந்த விழாவில் கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

படம் பற்றி இயக்குநர் ராம் ஷேவா பேசும்போது, “இன்றைய சமூகத்தில் எல்லோருமே புத்திசாலிகள்தான். ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே. இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.

படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி,  பொள்ளாச்சி,  ஆனைமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது..” என்றார் இயக்குநர்.




error: Content is protected !!