V.Z.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி – அதுல்யா ரவி நடிக்கும் ‘ஏமாலி’ திரைப்படம்

V.Z.துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி – அதுல்யா ரவி நடிக்கும் ‘ஏமாலி’ திரைப்படம்

லதா புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எம்.லதா, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘ஏமாலி’.

‘முகவரி’, ‘தொட்டி ஜெயா’, ‘நேபாளி’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குநரான V.Z.துரை, இந்த ‘ஏமாலி’ என்னும் புதிய படத்தையும் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் யதார்த்த நடிகர் சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க  அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

தயாரிப்பு – M. லதா, இயக்குநர் – V.Z.துரை, வசனம் – ஜெயமோகன், ஒளிப்பதிவு – M.ரத்திஷ் கண்ணா, I. பிரகாஷ், இசை – சாம் D ராஜ், பாடல்கள் – மோகன்ராஜ், V.Z. துரை, படத் தொகுப்பு – R.சுதர்சன், கலை – K. ஆறுசாமி, நிர்வாக தயாரிப்பு – V.கார்த்திக், தயாரிப்பு நிர்வாகம் - R.S.வெங்கட், லைன் புரொடியூசர் – முகமது இப்ராஹிம் (ரைட் ஐ தியேட்டர்ஸ்), மக்கள் தொடர்பு – நிகில், டிசைன்ஸ் – ஜோசப் ஜாக்சன்.

இந்த ‘ஏமாலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று காலை துவங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் படத்தில் பங்கு கொள்ளும் அனைத்துக் கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறவுள்ளது.