“எனது கடின உழைப்புக்கு ‘பாக் மில்கா பாக்’ படம்தான் முக்கியக் காரணம்..” – நடிகர் அத்ர்வாவின் பேச்சு..!

“எனது கடின உழைப்புக்கு ‘பாக் மில்கா பாக்’ படம்தான் முக்கியக் காரணம்..” – நடிகர் அத்ர்வாவின் பேச்சு..!

நடிகர் அத்ர்வா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில்  வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘ஈட்டி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் அத்ர்வா, நாயகி ஸ்ரீதிவ்யா, படத்தின் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன், செரொபின் ராய சேவியர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் சரவணன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, கதிரேசன், தேனப்பன் பி.எல்., கே.ராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

eetti-audio-stills-3

நாயகன் அதர்வா பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை தாணு சார்தான் முதலில் எனக்கு அனுப்பி வைத்தார். கதையை படித்தவுடன் எனக்கு பிடித்துவிட்டது. இந்த கதைக்கு பின்னால் இயக்குநர் வெற்றிமாறனும் இருக்கிறார் என்பதலேயே நான் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

இயக்குநர் ரவி அரசு உண்மையில் மிக சிறந்த இயக்குநர். நான் என்னுடைய முயற்சிகளில் உறுதியாக இருந்தேன். மேலும் இந்த படத்துக்காக மிக பெரிய அளவில் உணவு கட்டுபாட்டு முறையை கடைப்பிடித்து வந்தேன்.

இதனாலேயே எனக்கு படப்பிடிப்பு தளத்தில் அடிக்கடி மயக்கம் வரும். சில நேரங்களில் கண் மங்கலாக தெரியும். எதிரில் என்ன இருக்கிறது என்றே எனக்கு தெரியாது. கேமராவைகூட நான் தேடி கொண்டுதான் இருப்பேன். அந்த நேரங்களில் நான் ஏதாவது ஒரு திசையை நோக்கி நடிக்கிறேன். நீங்கள் அதை படம் பிடித்து கொள்ளுங்கள் என்று கூறிவிடுவேன்.

‘பாக் மில்கா பாக்’ படத்தில் நடிகரும், இயக்குநருமான பார்ஹான் அக்தர் அவர்களின் நடிப்பை பார்த்து நான் மிரண்டுவிட்டேன். அவருடைய நடிப்புதான் இந்தப் படத்தில் நான் நடிக்க மிக பெரிய பலமாக இருந்தது. ‘பாக் மில்க்ஹா பாக்’ படம்தான் இந்த படத்துக்காக நான் கடுமையாக உழைக்க என்னுள் ஒரு வெறியை உண்டாக்கியது...” என்றார்.