புதுமுகங்கள் நடிக்கும் ‘ஈடிலி’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது..!

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஈடிலி’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது..!

சாகர் புரொடக்சன்ஸ் மற்றும் சித்தர் மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஈடிலி’.

இந்தப் படத்தில் லிம்மல் ஜி,  லீசா எக்லேயர்ஸ், நிகாரிகா, ‘அட்டு’ ரிஷி மற்றும் பலர் நடிக்கவிருக்கிறார்கள். இயக்குநர் யுவன் முத்தையா எழுதி, இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் ஜாக்குவார் தங்கம், ‘அம்மா கிரியேசன்ஸ்’ டி சிவா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ‘ஸ்கெட்ச்’ பட இயக்குநர் விஜய் சந்தர், ‘இறுதிச் சுற்று’ & ‘இறைவி’ திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.