full screen background image

பிரபாகரன் பெயர் சர்ச்சை – மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான்

பிரபாகரன் பெயர் சர்ச்சை – மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான்

மலையாள நடிகரான துல்கர் சல்மானின் தயாரிப்பில் சென்ற மாதம் வெளியான மலையாளத் திரைப்படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. இத்திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனின் பெயரை ஒரு நாய்க்கு வைத்திருக்கிறார்கள்.

இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும், திரையுலகத்தினரும் ஒன்றிணைந்து தங்களது கண்டனத்தை துல்கர் சல்மானிடம் தெரிவித்தனர்.

நாமும் நமது இணையத்தளத்தின் சார்பாக நமது கண்டனத்தை இந்தப் பதிவில் தெரிவித்திருந்தோம்.

தமிழகம் முழுவதும் எழுந்த கண்டனக் குரல்களை அடுத்து தனது டிவீட்டர் பக்கத்தில் இந்தச் செயலுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

இது பற்றி டிவீட்டரில் துல்கர் சல்மான் எழுதியிருப்பது இதுதான் :

Dulquer-Salman-tweets-1

“வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல.

பழைய மலையாளப் படமான ‘பட்டண பிரவேஷம்’ படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்…”

இவ்வாறு துல்கர் சல்மான் தனது டிவீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Our Score