சர்வானந்த்-ரீத்து வர்மா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் 18-வது படம் துவங்கியது..!

சர்வானந்த்-ரீத்து வர்மா நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் 18-வது படம் துவங்கியது..!

‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.

தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தை இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றையும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

sarvvanand-reethu varma

இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘துருவங்கள் பதினாறு’  இசைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய், அதே படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் மற்றும் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங் மூவரும் இப்படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர். ‘கைதி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் கலை இயக்கம் செய்கிறார் என்.சதீஷ்குமார். நிர்வாகத் தயாரிப்பு – அரவிந்தராஜ் பாஸ்கரன், தயாரிப்பு – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு.

வாழ்கையில் பிரிக்க முடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய் பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்படுள்ளது இதன் கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

இத்திரைப்படம் 2020-ம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.

 




error: Content is protected !!