‘டோரா’ படத்தின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு..!

‘டோரா’ படத்தின் பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியீடு..!

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் வி,ஹிதேஷ் ஜபக் வழங்க அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘டோரா.’

நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் உடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை சற்குணம் சினிமாஸ் முதல் பிரதி முறையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசை – விவேக், மெரிவின், ஓளிப்பதிவு - தினேஷ் கிருஷ்ணன், படத்தொகுப்பு - கோபி கிருஷ்ணா.

மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ‘டோரா’ படத்தின் இசை உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘டோரா’ படத்தின் பாடல்கள் அனைத்தும் சிங்கிள் டிராக்காக சோனி மியூசிக் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடவுள்ள நிலையில், இப்பாடலை தொடர்ந்து இப்படத்தின் மற்ற பாடல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்படவுள்ளன.