சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கே.பி., மனோரமா படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கே.பி., மனோரமா படங்கள் திரையிடப்படுகின்றன.

வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் 17-ம் தேதிவரையிலும் 13-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த பட விழாவில் சமீபத்தில் மறைந்த தமிழ் திரைப்பட மேதைகளான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் மற்றும் நடிகை ஆச்சி மனோரமாவை போற்றும்வகையில் அவர்களுடைய திரைப்படங்களை ‘இந்தியன் பனோரமா’ பிரிவில் திரையிட இருப்பதாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் ICAF அமைப்பின் செயலாளர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

‘The Times Of Balachander’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த திரையிடலில் ‘மேஜர் சந்திரகாந்த்’, ‘பாமா விஜயம்’, ‘இரு கோடுகள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘தில்லு முல்லு’, ‘சிந்து பைரவி’, ‘ஏக் தூஜே கலியே’, ‘புன்னகை மன்னன்’ ஆகிய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

மேலும் மனோரமாவின் நடிப்பிற்காக இன்றளவிலும் பேசப்பபடு்ம் அவருடைய சிறந்த திரைப்படங்களும் திரையிடப்படவுள்ளன. அதற்கான தேர்வு இப்போது நடைபெற்று வருவதாக தங்கராஜ் தெரிவித்தார்.




error: Content is protected !!