விஜய்யின் 60-வது படத்தினை பரதன் இயக்குகிறாராம்..!

விஜய்யின் 60-வது படத்தினை பரதன் இயக்குகிறாராம்..!

நடிகர் விஜய்யின் 60-வது படத்தினை இயக்குநர் பரதன் இயக்கவிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் பரதன் முதன்முதலில் ‘கல்யாணசுந்தரம்’ என்ற பெயரில் பார்த்திபன். சாக்ஷி அகர்வால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வந்த நிலையில் அந்தப் படம் டிராப்பானது.

அதன பின்பு இவருடைய மிக நெருங்கிய நண்பரான இயக்குநர் தரணியுடன் இணைந்து அவருடைய படங்களுக்கு வசனம் எழுதினார். ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’, ‘மதுர’, ‘ஒஸ்தி’ ஆகிய படங்களுக்கு வசனகர்த்தா இவர்தான்.

கில்லியில் பணியாற்றியபோது ஏற்பட்ட நட்பின் காரணமாக விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தினை இயக்கினார். அந்தப் படம் சுமாராக ஓடியதால் அதற்குப் பிறகு சில ஆண்டுகள் படங்களை இயக்காமல் வசனம் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார்.

கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த ‘காக்டெயில்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அதிதி’ படத்தை இயக்கியிருந்தார்.

இப்போது விஜய் 59-வது படமா ‘தாறுமாறு’ படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் முடிந்ததும் தொடங்கவுள்ள தனது 60-வது படத்திற்கு பரதனை டிக் செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெயம் ராஜா, தரணி, கே.வி.ஆனந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் வரிசையாக விஜய்யிடம் கதை சொல்லி வந்த நிலையில் பரதன் சொன்ன கதை விஜய்யை கவரவே ஓகே சொல்லியிருக்கிறாராம்.

இந்தப் படத்தை விஜயா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மற்ற விபரங்கள் விரைவில் தெரிய வரும்..!