பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய அருண்ராஜா காமராஜின் திரைப்படம்..!

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்திய அருண்ராஜா காமராஜின் திரைப்படம்..!

இயக்குநராகும் பல வருட கனவில் இருந்த பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ், தற்போது இன்னமும் பெயரிடப்படாத ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.

படத்தில் அப்பா கேரக்டரில் நடிகர் சத்யராஜூம், மகள் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடித்துள்ளனர்.

திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத் தொகுப்பாளராகவும், லால்குடி இளையராஜா கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள். பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்க, போஸ்டர்களை வடிவமைக்கிறார் வின்சி ராஜ்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள. 

படம் பற்றி இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பேசுபோது, “இது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம், ஏனென்றால் அது வெளிப்படுத்தும் உணர்வுகள் அப்படிப்பட்டவை.

சத்யராஜ் சார், இளவரசு சார், ரமா மேடம், முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து இருக்கிறேன்.. அடுத்தகட்ட படப்பிடிப்பில்தான் கிரிக்கெட் போட்டிகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. அதற்காக நடிகைகளும், கிரிக்கெட் ஆடும் பெண்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மிகவும் சவாலாக இருக்கும் அந்த படப்பிடிப்புக்காக காத்திருக்கிறோம்…” என்றார்.