உடல் உறுப்புகள் திருட்டு பற்றிய திரைப்படம் ‘துரியோதனா’

உடல் உறுப்புகள் திருட்டு பற்றிய திரைப்படம் ‘துரியோதனா’

திரில்லர் படங்களுக்கு எப்போதும் ஒரு மாஸ் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த ‘இரும்புத்திரை’, ‘தனி ஒருவன்’ ஆகிய திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த வகையில் புதியவர்களின் முயற்சியாக ‘துரியோதனா’ திரைப்படம் வரவிருக்கிறது. 

இதில் கதாநாயகனாக பிரதோஷ், வினு ராகவ் இருவரும் நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில் புகழ்பெற்ற நவ்யா சாமி நாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷில்பாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

ஒளிப்பதிவு – ஹரீஷ் அப்துல்லா, மகேஷ் ராம், படத் தொகுப்பு – விமல் , வசனம் – தனசேகரன், இசை – C.S.குமார் , பாடல்கள் – ஸ்ரீதர், பிரதோஷ், கதை, திரைக்கதை, இயக்கம் – பிரதோஷ். 

படம் பற்றி இயக்குநர் பிரதோஷ் பேசுகையில், “உடல் உறுப்புகளை கடத்தும் கும்பலால்   ஹீரோயின் கடத்தப்படுகிறார். அதை கண்டு பிடிக்க சீக்ரெட் டிடெக்டிவ் ஆபீசர் ஒருவர் டெல்லியில் இருந்து கேரளா வருகிறார். அவர் எப்படி இந்தக் கும்பலை கண்டறிகிறார் என்பதுதான் கதை.

கதையின் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பாக காட்சிகளில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை வந்த திரில்லர் படங்களில் இந்தப் படம் வேறு கோணத்தில் இருக்கும்…” என்றார். 

மும்பை, டெல்லி, ராமேஸ்வரம், கேரளாவின் அடர்த்தியான காடுகளில் இந்த ‘துரியோதனா’ திரைப்படம் படமாக்கப்பட்டது. 

இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் ‘ஆக்சன் ரியாக்சன்’ நிறுவனம் மூலம் ஜெனீஷ் வீரபாண்டியன் வெளியிடுகிறார்.