கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிவரும் ‘தோனி கபடி குழு’

கிரிக்கெட் மற்றும் கபடியை மையமாகக் கொண்டு உருவாகிவரும் ‘தோனி கபடி குழு’

பல திரைப்படங்கள் தமிழில் விளையாட்டை மையமாக வைத்து வந்துள்ளன. அதில் தற்போது தயாரிக்கப்படும் ‘தோனி கபடி குழு’ திரைப்படமும் இணைந்துள்ளது. 

இந்தப் படத்தில் ‘மை டியர் பூதம்’ தொடரில் நடித்த அபிலாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ‘பட்டம் போலே’ மலையாளப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்த லீமா, இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.      

மேலும் தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், C.N.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இவர்களை தாண்டி நிஜமான கபடி விளையாட்டு வீரர்கள் சிலரும் படத்தில் நடிக்கிறார்கள்.

இசை – ரோஷன் ஜோசப், பின்னணி இசை – மகேந்திரன், பாடல்கள் – ராசா, ஒளிப்பதிவு – வெங்கடேஷ், படத் தொகுப்பு – கார்த்திகேயன், கலை – A.C.சேகர், உடைகள் -K.மனோகரன், தயாரிப்பு – நந்தகுமார், எழுத்து, இயக்கம் – பி.ஐயப்பன்.

IMG_5617

படம் பற்றி இயக்குநர் பி.ஐயப்பன் பேசும்போது, “தோனி கபடி குழு’ என்ற தலைப்பே படத்தின் கதையை உணர்த்துகிறது. நல்ல கதைதான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது. படத்தில் மொத்தம் ஒன்பது கதாபாத்திரங்கள் உள்ளன.

இக்கதையின் பெரும் பகுதி கற்பனையானது. இதில் கொஞ்சமாக என்னுடைய வாழ்க்கைக் கதையையும் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடிதான் வளர்ந்தேன். நான் பள்ளியில் கபடி அணி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள்  கிரிக்கெட் விளையாடும்போது அது எனக்குப் பிடிக்காமல் இருந்தது. அதன் பிறகுதான் கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. இந்த ‘தோனி கபடி குழு’ திரைப்படத்தில் சமூகக் கருத்தும் உள்ளது…” என்றார். 

dhoni kabadi kuzhu movie

இப்படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. படம் வருகிற 2018 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

வருகிற ஜூலை 7-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று, இந்தப் படத்தின் டைட்டில் லோகோவை வெளியிட இருக்கிறார்கள்.




error: Content is protected !!