புதுமுகங்கள் வசி-பூஜாஸ்ரீ நடித்திருக்கும் ‘தவம்’ நவம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

புதுமுகங்கள் வசி-பூஜாஸ்ரீ நடித்திருக்கும் ‘தவம்’ நவம்பர் 8-ம் தேதி வெளியாகிறது

ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பில் வசி ஆஸிப் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘தவம்.’

இந்தப் படத்தில் நாயகனாக புதுமுகம்  வசி நடித்துள்ளார். நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார். இயக்குநரும், நடிகரும், ‘நாம் தமிழர்’ கட்சியின் நிறுவனருமான சீமான் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

மற்றும் அர்ச்சனா  சிங்,  சிங்கம் புலி,  போஸ்  வெங்கட்,  சந்தான பாரதி,  பிளாக் பாண்டி, ‘கூல்’ சுரேஷ், தெனாலி, ‘கிளி’ ராமச்சந்திரன், வெங்கல்ராவ்  ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – வேல்முருகன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் – இந்துமதி, எழில் வேந்தன், கோவிந்த், கலை இயக்கம் – ராஜு, படத் தொகுப்பு – எஸ்.பி.அகமது, நடன இயக்கம் – ரவிதேவ், சண்டை இயக்கம் – ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை – குமரவேல், சரவணன், தயாரிப்பு  – வசி ஆஸிப், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -ஆர்.விஜயானந்த் –  ஏ.ஆர்.சூரியன்.

இத்திரைப்படம் பற்றிய இரட்டை இயக்குநர்கள் பேசும்போது, “விவசாயத்தைக் காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும்விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது இந்தத் ‘தவம்’ திரைப்படம்.

முழுக்க, முழுக்க கதையை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளோம். விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், பெண்களின் பெருமையையும் உணர்த்தும் படம் இது. எல்லோரும் மறந்த  ஒரு  காதலையும்  இந்தப்  படத்தில்  சொல்லியிருக்கிறோம். அது  நிச்சயம்  பெரிய வரவேற்பை பெரும்.

படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் ‘படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. முக்கியமாக கதாநாயகன் வசி புதுமுக நடிகர் போலவே தெரியவில்லை. அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருந்தார்’ என்று வெகுவாக பாராட்டினார்கள்.

அது மட்டுமல்லாமல் ‘இத்திரைப்படம் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமான படம்’ என்றும் கூறினார்கள். இந்தப் படத்தைப் பார்த்தத் தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் பாராட்டியிருக்கிறா்கள்..” என்றார்.

இந்தத் ‘தவம்’ படத்தை  பட விநியோகத் தொழிலில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம், வரும் நவம்பர் 8-ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

 




error: Content is protected !!