‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழா..!

‘தர்மதுரை’ படத்தின் 100-வது நாள் விழா..!

'தர்மதுரை' படத்தின் 100-வது நாள் விழாவும், 'அட்டு' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேற்று மாலை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் 'தர்மதுரை' படத்தில் நடித்த, பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் பரிசு கேடயங்கள் வழங்கப்பட்டன.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தாணு அனைத்து கலைஞர்களுக்கும் இந்த விருதினை வழங்கி கெளரவித்தார்.

விழாவில் 'தர்மதுரை' படத்தில் பங்கேற்ற அத்தனை கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.