‘தர்ம பிரபு’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவக்கம்..!

‘தர்ம பிரபு’ படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவக்கம்..!

யோகி பாபு நாயகனாக நடித்து வரும் ‘தர்மப்பிரபு’ படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரங்கநாதன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

யோகிபாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

படத்தில் யோகி பாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார்.

PHOTO-2019-02-12-08-46-23

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத் தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குநராகவும் பணி புரிகிறார்கள். பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பினை ராஜா செந்தில் மேற்கொள்கிறார். இயக்குநர் முத்துக்குமரன் இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இடம் பெறும் எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏவி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள். 

_MG_9502.JPG-1

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பூலோகம் பகுதியில் படமாக்கப்படுவதாக கதை அமைந்திருப்பதால், இதற்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி பூலோகம் போல் செட் அமைக்கப்பட்டு தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். அந்தப் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

இப்படம் முழு நீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது.




error: Content is protected !!