‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது

‘தேவி-2’ திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி வெளியாகிறது

பொதுவாக ‘திகில்’ படங்கள் எப்போதும் குடும்ப பார்வையாளர்களின் விருப்ப படமாக  இருந்ததில்லை. ஆனால் அந்த எண்ணத்தை முறியடித்தத் திரைப்படம் ‘தேவி’.

இயக்குநர் விஜய் மிகவும் புத்திசாலித்தனமாக நகைச்சுவை கலந்த குடும்பக் கதையில் பேய்க் கதையையும் புகுத்தி ஒரு வித்தியாசமான, புதுமையான படமாக தேவி படத்தை உருவாக்கியிருக்கிறார். அதனாலேயே குடும்ப ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றது ‘தேவி’ திரைப்படம்.

‘பேய்’ படங்களிலேயே சற்று வித்தியாசமாக உருவானது தேவி. பயமுறுத்துவதையும் தாண்டி நம்மை விலா நோக சிரிக்க வைத்தது ‘தேவி’. இப்போதும்கூட, டிஜிட்டல் தளங்கள் மற்றும் டிவி சேனல்களில் பார்க்கும் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கிறது.

இப்போது இதே பாணியில் ‘தேவி-2’ படத்தையும் இதே அணி உருவாக்கியிருக்கிறது.

ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

dev-2-movie-poster-1

இந்தப் படத்தில், பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா உட்பட பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி அன்று வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

‘தேவி-2’ திரைப்படம் பற்றி இயக்குநர் விஜய் கூறும்போது, “நல்ல விஷயங்கள் எப்போதும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் நடக்கும் என்று சொல்வார்கள். அது இப்போது இந்த ‘தேவி-2’ படத்திலும் நடக்கிறது என்பதால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

கோடை விடுமுறை என்பது எப்போதுமே குடும்ப பார்வையாளர்களுக்கானது. அவர்கள் திரையரங்குகளுக்கு வந்து நல்ல  பொழுதுபோக்கு படங்களை ரசிக்க விரும்புவார்கள்.

‘தேவி-2’ படம் குடும்ப ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அவர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்தான். காமெடி, எமோஷன், காதல், இசை மற்றும் பொழுது போக்கு அம்சங்களும் இந்தப் படத்திலும் உள்ளன.

பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. பிரபுதேவா ஸாரின் எனர்ஜி அபாரமானது. முதல் பாகம் போலவே இந்த படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார். தமன்னா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தில் அதைவிடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார்.

படக் குழுவில் இருந்த எல்லோரும் அளித்த  சிறந்த பங்களிப்புதான் குறித்த காலத்தில் படத்தை முடிக்க காரணமாக இருந்தது. இந்த கோடை காலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக இந்த ‘தேவி-2’ திரைப்படம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

 
error: Content is protected !!