புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தேவகோட்டை காதல்’ திரைப்படம்

புதுமுகங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தேவகோட்டை காதல்’ திரைப்படம்

அழகான பெண்ணுக்கும் அழகில்லாத  பையனுக்கும் உள்ள காதலை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது ‘தேவகோட்டை காதல்’ திரைப்படம்.

ஹப்பாஸ் மூவி லைன் என்ற பட நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சுவிதா என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார். 

மற்றும் கஞ்சா கருப்பு, பாவா லட்சுமணன், தீப்பெட்டி கணேசன், கிளி ராமச்சந்திரன், மெடிமிக்ஸ் ஏ.வி.அனு, சதாந்தன், மனோஜ், சலாம், ஸ்ருதி, ரஜினி, முரளி, வத்சலா, டீச்சர் சுஜித்திரா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்

கதை – சீனு, திரைக்கதை – A.R.K., P.P.A.ரஹ்மான், பாடல்கள் – காதல் மதி, இசை – ஜோன பக்தகுமார், படத் தொகுப்பு – இப்ரு, சண்டை பயிற்சி – ஜீரோஸ், நடனம் – ராஜேஷ், ஒளிப்பதிவு – ரஞ்சித் ரவி, இணை தயாரிப்பு – பீனா காசிம், வத்சலா டீச்சர் சபீனா.கே. எழுத்து, இயக்கம்  –   A.R.K. இவர் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.கே. பேசும்போது, “படித்த, பணக்கார, அழகான பெண்ணுக்கும்… படிக்காத, அழகில்லாத, ஏழை பையனுக்கும் ஏற்படும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும், கலவரங்களும்தான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரை, ஆலப்புழை மற்றும் பாலக்காடு அருகில் இருக்கும் எம்.ஜி.ஆரின் உறவினர் வீடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்றது…” என்றார்.