சந்தானம்-ரித்திகா சென் நடிக்கும் ‘டகால்டி’ திரைப்படம்

சந்தானம்-ரித்திகா சென் நடிக்கும் ‘டகால்டி’ திரைப்படம்

‘18 Reels’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் திருப்பூரைச் சேர்ந்த பிரபல மருத்துவரும், திரைப்பட விநியோகஸ்தருமான எஸ்.பி.செளத்ரி, தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘டகால்டி’.

இத்திரைப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரபல வங்க மொழி முன்னணி நடிகையான ரித்திகா சென் நடிக்கிறார்.

மேலும், ராதாரவி, ரேகா, சந்தானபாரதி, மனோபாலா, யோகி பாபு, நமோ நாராயணா, இந்தி நடிகர் ஹேமந்த் பாண்டே ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபலமான ஹிந்தி நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

பிரபல பின்னணி பாடகரான விஜய் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்கள் – கார்க்கி, ஒளிப்பதிவு – தீபக்குமார் பதி, படத் தொகுப்பு – டி.எஸ்.சுரேஷ், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை பயிற்சி – ஸ்டண்ட் சில்வா, நடனப் பயிற்சி – ஷோபி, தயாரிப்பு மேற்பார்வை – சுவாமிநாதன், இணை தயாரிப்பு – ரமேஷ்குமார், எழுத்து, இயக்கம் –  விஜய் ஆனந்த். இவர் இயக்குநர் ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

இது ஆக்சன் கலந்த காமெடி திரைப்படம். படத்தின் சண்டை காட்சிகள்கூட காமெடியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், காரைக்குடி, கடப்பா, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளது.
error: Content is protected !!